வீணாக மழை நீர் கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கல்குவாரி பகுதியில் சேமிக்கும் பணியை துவக்கம்..
தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழக சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு செல்வப்பெருந்தகை ஆகியோர்கள் கடந்த 6.11.2022 அன்று சிக்ராபுரத்தில் அமைந்துள்ள கல்குவாரியினை பார்வையிட்டு அதற்கேற்ப உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உத்தரவிட்டதன் பேரில் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை மலையம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பெய்யக்கூடிய மழை நீர் அப்படியே மாங்காடு நகராட்சிக்கு வருவதை தடுத்து வீணாக மழை நீர் கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கல்குவாரி பகுதியில் சேமிக்கும் பணியை துவங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை இன்று காலை, மாங்காடு நகர கழக செயலாளரும் நகர மன்ற துணை தலைவர் மனித நேயர் அண்ணன் பட்டூர் எஸ் ஜபருல்லா, மாங்காடு நகர மன்ற தலைவர் திருமதி சுமதி முருகன், நகராட்சி ஆணையர் திருமதி இரா.சுமா ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
No comments
Thank you for your comments