ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் காத்திருப்பு போராட்டம்
திமுக அமைச்சர் திறந்து வைத்த பள்ளி கட்டட கல்வெட்டில் பெயர் இல்லை, ஊராட்சி மன்ற தலைவருக்கு அழைப்பு இல்லை என விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தில் சுமார் 17 லட்சத்து 50 -ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கடந்த 11.11.2022ஆம் தேதி தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.
பள்ளி கட்டடத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டில், திமுக அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் பெயர் மட்டும் இருந்ததால், ஊராட்சி மன்ற தலைவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ -வும் கடும் கொந்தளிப்பு அடைந்தனர்.
இன்று ஊராட்சி மன்ற தலைவர்கள் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பள்ளி கட்டிடம் திறப்பு விழாவிற்கு ஆலடி ஊராட்சி மன்ற தலைவர் பியூலா ஜெயக்குமாருக்கும், விருத்தாசலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனுக்கும் முறையான அழைப்பு கொடுக்காதது கல்வெட்டில் பெயர் இல்லாததை கண்டித்தும், முறையற்ற கல்வெட்டை நீக்க கோரியும், முறையான புதிய கல்வெட்டை வைக்க வேண்டும் மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளில் ஆணவப்பக்கோடு செயல்பட்டு வரும் கொக்கம்பாளையம் 3-வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் பச்சமுத்துவை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் நாற்பட்டமானது காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெற்று வருவதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
No comments
Thank you for your comments