Breaking News

வெங்கச்சேரி செய்யாற்றில் வெள்ளம்... வாகனங்கள் செல்ல தடை அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்வதில் சிரமம் தமிழகத்தி

வெங்கச்சேரி செய்யாற்றில் 2 வது நாள் தொடர் வெள்ளத்தால் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகியுள்ளனர்.




தமிழகத்தில் வடகிழக்கு பருவ  மழை தொடங்கி கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி கொள்ளளவு எட்டியுள்ளது.


உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கசேரில் உள்ள செய்யாற்றில் நேற்று காலை வரை 600 கன அடி நீர் மட்டும் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்தது நீர்வளத்துறையினர் கணக்கெடுப்பில் வினாடிக்கு 3377 கன அடி நீர் செல்வது தெரிய வந்தது  திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், தற்காலிக பாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் செல்ல தடை செய்யப்பட்டது இதை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இரண்டாவது நாளான தொடர்வதால் இன்று தற்காலிக பாலத்தில் விரிசல் ஏற்பட்டது .

இதனால் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது  அத்தியாவசிய பொருள்களான சிலிண்டர் பால் மளிகை பொருட்கள் அனைத்தும் தலையில் தூக்கிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது, பள்ளி மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் ஆற்றைக் கடந்து சென்று பேருந்து ஏற சிரமப்பட்டு வருகின்றனர்

No comments

Thank you for your comments