தேவரியம்பாக்கத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களை ஓட விடும் அரசு பேருந்துகள்
வாலாஜாபாத் ஒரகடம் சாலையில் தேவரியம் பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் தேவர்யம்பாக்கம் லிங்காபுரம் தோண்டாங்குளம் கொசப்பட்டு நல்லூர் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பணிக்கு செல்லும் பொதுமக்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்
இவ் வழியாக செல்லும் 79 தடம் எண் கொண்ட அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று பேருந்து பலகை வைத்தும் இதுவரை பேருந்துகள் நிற்காமல் செல்வதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
மேலும் 579 தடம் எண் கொண்ட பேருந்துகள் மாணவர்கள் அலுவலகம் செல்வோர் அதிகம் பயணிக்கும் காலை மாலை நேரங்களில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவோ அல்லது தள்ளியோ நிறுத்தி இறங்க வேண்டிய பயணிகளை மட்டும் இறக்கி விட்டு விட்டு பயணிக்க தயாராக உள்ள மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோரை பேருந்துகளில் ஏற்றாமல் சென்று விடுகின்றனர்
இதனால் மாணவர்களும் பயணிகளும் அங்கும் இங்கும் நெடுஞ்சாலையில் ஓடி அலைந்து அல்லல் பட்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டிய அபாய நிலை உள்ளது
இதுகுறித்து மாணவ மாணவிகளும் பயணிகளும் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் துணை தலைவர் கோவிந்தராஜ் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர்
இதை அடுத்து அங்கு வந்து சேர்ந்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் பேருந்து நின்று செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்
எனவே இங்கு போக்குவரத்து ஆய்வாளரை நிறுத்தி முறையாக பேருந்துகள் நிறுத்தங்களில் நின்று செல்லவும் பள்ளி மாணவர்கள் அலுவலக செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆபத்து இல்லாத வகையில் பயணம் செய்திட பேருந்துகள் நின்று சென்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்தேவரியம்பாக்கத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களை ஓட விடும் அரசு பேருந்துகள்
வாலாஜாபாத் ஒரகடம் சாலையில் தேவரியம் பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது
இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் தேவர்யம்பாக்கம் லிங்காபுரம் தோண்டாங்குளம் கொசப்பட்டு நல்லூர் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பணிக்கு செல்லும் பொதுமக்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்
இவ் வழியாக செல்லும் 79 தடம் எண் கொண்ட அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று பேருந்து பலகை வைத்தும் இதுவரை பேருந்துகள் நிற்காமல் செல்வதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
மேலும் 579 தடம் எண் கொண்ட பேருந்துகள் மாணவர்கள் அலுவலகம் செல்வோர் அதிகம் பயணிக்கும் காலை மாலை நேரங்களில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவோ அல்லது தள்ளியோ நிறுத்தி இறங்க வேண்டிய பயணிகளை மட்டும் இறக்கி விட்டு விட்டு பயணிக்க தயாராக உள்ள மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோரை பேருந்துகளில் ஏற்றாமல் சென்று விடுகின்றனர்
இதனால் மாணவர்களும் பயணிகளும் அங்கும் இங்கும் நெடுஞ்சாலையில் ஓடி அலைந்து அல்லல் பட்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டிய அபாய நிலை உள்ளது
இதுகுறித்து மாணவ மாணவிகளும் பயணிகளும் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் துணை தலைவர் கோவிந்தராஜ் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர்
இதை அடுத்து அங்கு வந்து சேர்ந்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் பேருந்து நின்று செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்
எனவே இங்கு போக்குவரத்து ஆய்வாளரை நிறுத்தி முறையாக பேருந்துகள் நிறுத்தங்களில் நின்று செல்லவும் பள்ளி மாணவர்கள் அலுவலக செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆபத்து இல்லாத வகையில் பயணம் செய்திட பேருந்துகள் நின்று சென்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்

No comments
Thank you for your comments