அதிகபாரம் ஏற்றிய சரக்கு டிப்பர் லாரிகளுக்கு 4 ½ லட்சம் அபராதம் மற்றும் சிறை பிடிப்பு
அதிகபாரம் ஏற்றிய சரக்கு டிப்பர் லாரிகளுக்கு 4 ½ லட்சம் அபராதம் மற்றும் சிறை பிடித்து காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை தெற்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு.ஜெயசங்கரன் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தினகரன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கா.பன்னீர்செல்வம் அவர்கள் காஞ்சிபுரம் மற்றும் வாலஜபாத் பகுதிகளில் அதிகாலை முதல் திடீர் தணிக்கை மேற்கொண்டு சக்கைக்கல், மலைமண், உளிக்கல், ஜல்லி போன்றவைகளை சட்டத்திற்கு புறம்பாக அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அருகே உள்ள எடை மேடைகளில் எடைபோட்டு அனுமதிக்குப் புறம்பாக அதிகபாரம் ஏற்றிய வாகனங்கள் சுமார் எட்டு வாகனங்களுக்கு 3,66,000 ரூபாயும், ஒரு கம்பெனி வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியும் அனுமதிக்குப்புரம்பாக காஞ்சிபுரத்தில் இயக்கியதர்க்கும், இலகு ரக சரக்கு வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமல் சென்றதற்கும் சிறை பிடித்து வாலஜபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் இதர குற்றங்களுக்காக ரூபாய் 64,500 அபராதம் மற்றும் 30,000 ருபாய் சாலை வரி ஆகமொத்தம் 4,60,000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
மேலும் இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில் அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் சாலை சேதம் அடைவதும் மற்றும் பிரேக் பிடிக்காமல் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும், கம்பெனி வாகங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.




No comments
Thank you for your comments