கோனாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலயத்தில் தமிழ் வளர்த்த வீரமாமுனிவரின் 342-வது பிறந்தநாள் விழா
விருத்தாசலம் :
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோனாங்குப்பம் உலக புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்த்த வீரமாமுனிவரின் 342-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருத்தல அதிபர் தேவசகாயராஜ் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் மற்றும் புதுவை- கடலூர் மறை மாநில தலைவர் ராபர்ட் பெஞ்சமின் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரமாமுனிவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னதாக கோணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தை சுற்றுலாத்தலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், தடையின்றி தொடர்ந்து பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும் வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளை வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் திருத்தல அதிபர் உதவி பங்கு தந்தை அந்தோணி ராஜ், சிறப்பு அழைப்பாளராக சூசை மணி, மாநில ஆசிரியர் அணி அற்புதராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்





No comments
Thank you for your comments