Breaking News

பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் , ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.11.2022) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் வீடுகளை பார்வையிட்டு, மேலும் அப்பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் பொருள்களை  பார்வையிட்டு, அதன் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை

பின்பு வாலாஜாபாத் ஒன்றியம், கொட்டவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டிடப் புனரமைப்பு பணிகளையும், அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.70 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளியில் கட்டப்பட்டு வரும்  கழிவறை கட்டிடத்தையும்  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டு,  ஆய்வு மேற்கொண்டார். பின்பு வாலாஜாபாத் அங்கன்வாடி மையத்தை  பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை ஆய்வு செய்தார். 

ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மண்புழு இயற்கை உரம் தயாரிக்க ரூ.1,46,943/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில், மகளீர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும்  காளான் வளர்ப்பு பயிற்சியினை பார்வையிட்டு, பயிற்சியாளர்களை ஊக்குவித்து, காளான் வளர்ப்பினை நல்லமுறையில் மேற்கொண்டு, இப்பயிற்சியினை திறம்பட பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். கொட்டவாக்கம் ஊராட்சியில் முருங்கை நாற்றங்கால் வளர்ப்பு  பண்ணையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இவ் ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர். திருமதி.ஸ்ரீதேவி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித்ஜெயின், இ.ஆ.ப., மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments