Breaking News

ரூ.44 கோடி நிலுவை... கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை

விருத்தாசலம் அருகே ஏ. சித்தூர் திரு ஆருரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு, தர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து   விருதாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது




கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ஏ. சித்தூர் திரு ஆருரான் சர்க்கரை ஆலை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு அப்பகுதி கரும்பு விவசாயிகளிடம் கரும்பு பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.44 கோடி பாக்கி நிலுவை தொகையை தராமல் மூடிவிட்டது.

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை

இந்நிலையில் கடந்த 6 வருடமாக தராததால்,  அப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகியதுடன் விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்   விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில்,  திரு ஆருரான் சக்கரை ஆலை நிர்வாகம், விவசாய சங்க பிரதிநிதிகள்,சார் ஆட்சியர் பழனி தலைமையில் நிலுவைத் தொகை சம்பந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் புதிய ஆலை நிர்வாகம் 44 கோடி நிலுவைத் தொகை தர வேண்டியதற்கு, தற்போது இரண்டரை கோடி ரூபாய் தருகிறோம், பாக்கி தொகை தர முடியாது என்று கூறியதால் விவசாய சங்க பிரதிநிதிகள் முழு தொகையை தாருங்கள், இல்லையெனில் மீண்டும் போராட்டங்கள் தொடரும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்

இது குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது.

2016, 2017. ல் திரு ஆருரான் சர்க்கரை ஆலைக்கு கரும்புவெட்டி கொடுத்தோம்,  கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தரவேண்டிய நிலுவை தொகை ரூ 44 கோடியினை, கரும்பு விவசாயிகளுக்கு தராத காரணத்தால், விவசாயிகள்  விவசாயம் செய்ய முடியாமலும், ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  இந்நிலையில் ஆறு வருடத்திற்கு முன்பு 1 டன் கரும்புக்கு 2, 550,, க்கு ஆலை நிர்வாகம் வாங்கியது,  6 வருடம் கழித்து டன்னுக்கு1550 தான் தருவோம் என கூறுகிறார்கள். 

ஆனால் நாங்கள் வங்கியில், 2,1/2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தான் கரும்பு பயிர் செய்தோம் என்றும், அதற்கு ஆறு வருடத்திற்கான வட்டியை போட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கட்டுமாறு பேங்க் அதிகாரிகள் கூறுகின்றனர். இல்லையெனில் சொத்தை ஜப்தி செய்வதாக கூறுகின்றனர்

நாங்கள் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொடுத்த கரும்புக்கு, தற்போது ஆலை நிர்வாகம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தான் தருவோம் என கூறுகின்றனர் வட்டி கேட்டால் தர மாட்டோம் என்று ஆலை நிர்வாகம் கூறுகின்றது.

அதேபோல் தமிழக அரசு தற்போது ஒரு டன் கரும்புக்கு ரூ4500விலை நிர்ணயம் செய்துள்ளனர். அதை போட்டுக் கொடுங்கள் என்று கேட்டாலும் தரமாட்டேன் என்று கூறுகின்றார்கள்.

தற்போது 3850 கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆருரான் சர்க்கரை ஆலையை,  145 கோடிக்கு புதிதாக நிர்வாகம் வாங்கி இருக்கிறார்கள். 

எனவே விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள விலைப்படி, விவசாயிகளுடைய நிலுவைத் தொகை 44 கோடியை கொடுங்கள் என்று நாங்கள் கேட்டோம், ஆனால் நிர்வாகம் தரமாட்டேன் என்று மறுத்துவிட்டது. அதில் பாதி 22 கோடியாவது கொடுங்கள் என போன மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கூறினோம்.

இதுகுறித்து பத்து நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார். 

ஆனால் தற்போது ஒரு மாதம் ஆகப்போகிறது என்றும், அதனால் 44 கோடியில் பாதியாவது 22 கோடி எங்களுக்கு கொடுத்துவிட்டு  ஆலை நிர்வாகத்தை நடத்துங்கள் என்று நாங்கள் கூறினோம்.

ஆனால் ஆலை நிர்வாகம் இரண்டரை கோடி ரூபாய் தான் தருவோம் என கூறுகின்றனர்.  இதனை எங்களால் ஏற்க முடியாது என்று கூறியதாக தெரிவித்தார். 

தமிழக அரசு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் தருவதாக கூறியுள்ள நிலையில்,   ஆலை நிர்வாகம் 1550 ரூபாய் தான் தருவோம் என கூறுகின்றார்கள். 

இது நியாயமா என கேட்டு கரும்பு ஆலை முன்பு எங்களுக்கான முழுமையான தொகையை தரும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றோம் என்றும்,  எங்களுக்கு முழுமையாக இரண்டு லட்சமும்,  அதற்கு உண்டான வட்டியும் தர வேண்டும் என்றும், அதைத்தான் கலெக்டரிடம் கூறினோம் என்றும் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தையில் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், ஆலை நிர்வாகம் ஏமாற்றுவதே  தொழிலாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தை சமூக தீர்வு எட்டப்படாததால், விவசாயிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் உரிய இழப்பீடு வழங்காதவரை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும்,  போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்என கூறினார்.

No comments

Thank you for your comments