கஞ்சா வியாபாரம் அமோகம்... வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் எஸ்டேட் மாதனங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையே வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவுக்கு தகவல் வந்ததை தொடர்ந்து உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அம்பத்தூர் மாதனாங்குப்பம் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த ஐசக் நியூம் என்பவர் கைது செய்யப்பட்டார்
இவர் சிறு சிறு பொட்டலமாக வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது இவரிடம் 12 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது மேற்படி இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று விசாரித்து வருகின்றனர்
ஐசக் நியூம் வயது (22) நிகியே கிராமம் கிஷின்ங் ராம் பெரன்மாவட்டம் நாகலந்து மாநிலம் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறனர்
இதனால் இவர்களை திறமையாக பிடித்து கைது செய்த அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கும் பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் அவர்களுடன் சென்ற காவலர்களை சந்திப் ராய் ரத்தோர் இ கா ப ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்

No comments
Thank you for your comments