Breaking News

இருசக்கர வாகனத்தில் சென்ற 18வயது இளைஞர் விபத்தில் பலி

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு கிராமம் பெருமாள் கோவிலை சேர்ந்த திரு. பார்த்திபன் (வயது 58) என்பவர் மகன் பெருமாள் என்கின்ற ப.மோகன் ராம் (வயது 18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சீமான் மகன் எஸ் வல்லரசு (வயது18) ஆகிய இருவரும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக TN 20 Cp 4358 என்ற பதிவு கொண்ட இருசக்கர வாகனத்தில்  மப்பேடு கூட்ரோடு நோக்கி செல்லும் போது K K நகர் வளைவு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது முன்புறமாக சென்று கொண்டிருந்த மசாலா பொருட்கள் டெலிவரி செய்யும் அசோக் லைலன்டு வாகனம்  சென்று கொண்டிருந்தது.


அந்த  வாகனம் திடீரென இடது புறமாக திரும்பியதால் பின்புறமாக இருசக்கர வாகனத்தை இயக்கி  வந்த  மோகன்ராம் என்பவர் வாகனத்தின்  மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில்  மோகன்ராம் தலையில் பலத்த காயமும் கால் முறிவு ஏற்பட்டு மயக்க நிலையிலும் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்புறமாக அமர்ந்து வந்த வல்லரசு சிறு காயத்துடன் இருந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் 

மருத்துவர்கள் பரிசோதித்து முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மோகன்ராம் என்பவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்  துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட மப்பேடு காவல் உதவியாளர் திரு.சிவகுமார் அவர்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்

No comments

Thank you for your comments