Breaking News

"இன்று போய், நாளை வா " என்ற வாசகத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு சார் ஆட்சியரை சந்தித்த 70 வயது முதியவர்

விருத்தாசலத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின், அலட்சியத்தை வெளிப்படுத்தும் வகையில்,  "இன்று போய், நாளை வா " என்ற வாசகத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு, விருத்தாச்சலம் சார் ஆட்சியரை  70 வயது முதியவர் சந்தித்தார்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் முதியவர் அய்யாசாமி (வயது 70). இவருக்கு சொந்தமான 3 1/4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில்,  அக்கிராமத்தைச், சேர்ந்த நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதற்காக முதியவர் அய்யாசாமி கடந்த 15 ஆண்டுகளமாக போராடி,  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,    நிலத்தை மீட்டெடுத்தார்.   

பின்னர்  நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு, அய்யாசாமிக்கு சாதகமாக வந்த பின்பு, அவரது தம்பி தங்கராசு, 3 1/4 நிலத்தை பயிர் செய்யவிடாமல், மிரட்டுவதாக அய்யாசாமி தெரிவிக்கிறார். 

இந்நிலையில் தனது சொத்தை மீட்பதற்காக  பல ஆண்டுகளாக  மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர்,  திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர், என  அனைத்து அதிகாரிகளுக்கு  மனு கொடுத்து வந்துள்ளார். 

ஆனால்  நிரந்தர தீர்வு எட்டப்படாமல், அதிகாரிகள்,  அலைக்கழிப்பதை, தெரியப்படுத்தும் வகையில், முதியவர் அய்யாசாமி தனது கழுத்தில், "இன்று போய், நாளை வா " என்று, நாள்தோறும் அதிகாரிகள் கூறுவதை,  வாசகமாக பதாதையில், எழுதி மாட்டிக் கொண்டு, சார் ஆட்சியர் பழனியை சந்தித்தார். 

இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, சார் ஆட்சியர் முதியவரிடம் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments