சிறுபான்மைக்கு ஆதரவு என்ற நிலையில் திமுக அரசு - காடேஸ்வரா சுப்பிரமணியம்
ஈரோடு :
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டியில் இந்து முன்னணியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, திமுக அரசு சிறுபான்மைக்கு ஆதரவு என்ற நிலை உள்ளது. கடம்பூரில் கிறிஸ்துவர்கள் வேல், சமி சிலையை உடைத்து ஒரு வருடம் ஆகியும், புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. காவல்துறை, முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக உள்ளது.
டி.என்.பாளையத்தில் உள்ள மத்தள கொம்பு தீர்த்த குளத்தில் முஸ்லீம்கள் இறைச்சி சாப்பிட்டு அசிங்கப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக இதுவரை காவல்துறை நடவடிக்கை இல்லை
காடையாம்பாளையத்தில் தீபாவளி அன்று மதமாற்ற சம்பவம் நடந்து உள்ளது. அதை கேட்க சென்ற போது அங்கு இருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மிரட்டி உள்ளார்.
காவல்துறை கொலை மிரட்டல் விடுத்து உள்ளது குறித்த ஆதாரம் உள்ளது. மூன்று சம்பவங்களிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை
மதமாற்றம் செய்யும் நபர் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர், அது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
நீலகிரி பாராளுமன்றத்தில் கடை அமைப்பின் போது சத்தியமங்கலத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளது
மாவட்ட எஸ்.பி. கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவரை கண்டித்து ஈரோட்டில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம். நடைபெற்ற சம்பவங்கள் காவல்துறை இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக தெரிகிறது.
கோவையில் ரகசிய அமைப்பு தொடங்கி உள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்பே நான் கூறி உள்ளேன். கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக டி.ஜி.பி. வருவதற்கு முன்பே நாங்கள் பார்த்து முஸ்லீம் தான் என கூறி உள்ளோம்.
ஜெகத் கஸ்பர் பிரிவினை குறித்து பேசியது, திருமாவளவன் போன்றோர் பெண்களை இழிவாக பேசியும் நடவடிக்கை இல்லை. பெயரளவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் இதுவரை கைது செய்யப்படவில்லை. என அவர் தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

.jpg)
No comments
Thank you for your comments