செய்யாற்றில் அமைந்துள்ள அனுமன்தண்டலத்தில் தடுப்பனையில் 600 கன அடி நீர் வெளியேற்றம்...
தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் அமைந்துள்ள அனுமன் தண்டலத்தில் தடுப்பனையில் 600 கன அடி நீர் வெளியேறி வருவதால் பொது மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் குளம், ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகள் மழை நீர் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் இருந்து உருவாகும் செய்யாறு ஆறு தற்போது ஜவ்வாது மலை பகுதியில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்த வருவதால் செய்யாறில் நீர் அதிகரித்து வருகிறது. இந்த ஆறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயணித்து பாலாற்றில் கலக்கிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் அடுத்துள்ள அனுமன்தண்டலம் பழமையான தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. தற்போது தொடர் மழையின் காரணமாக 600 கன அடி நீரானது தடுப்பனையை தாண்டி செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த செய்யாறு 600 கன அடி நீர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழைசீவரம் அருகே பாலாற்றில் கலந்து பின் பாலாற்றில் பயணித்து வருகிறது
No comments
Thank you for your comments