Breaking News

திம்மசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்... அரசின் சிறப்பு திட்டங்கள் அடங்கிய குறும் படம் பார்வை

காஞ்சிபுரம் மாவட்டம்,  நவம்பர் -1 ஊராட்சி தினம் முன்னிட்டு, திம்மசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.


காஞ்சிபுரம் மாவட்டம்,  நவம்பர் -1 ஊராட்சி தினம் முன்னிட்டு, திம்மசமுத்திரம் ஊராட்சியில், இன்று (01.11.2022)  நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.

திம்மசமுத்திரம் ஊராட்சியில், ஊராட்சி  நாளை   முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டின் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்த பதிவேட்டினை கிராம பொதுமக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. 

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் அவர்கள் 16 தீர்மானங்கள் கிராம பொதுமக்கள் முன்பு வாசித்தார். தீர்மானத்தினை பொதுமக்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.

மேலும், திம்மசமுத்திரம் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்ட.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

அதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினையும், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அதிநவீன எல்.இ.டி. வாகனத்தில் திரையிடப்பட்ட அரசின் சிறப்பு திட்டங்கள் அடங்கிய குறும் படத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ப.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments