Breaking News

காஞ்சிபுரத்தில் கல்விக்கொள்கை வரைவு தயாரிப்புக்காக கல்வியாளர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்,நவ.3

காஞ்சிபுரத்தில் மாநிலக்கல்விக் கொள்கை வரைவு தயாரிப்பு மேற்கொள்வதற்காக கல்வியாளர்கள், பாடவல்லுநர்கள் கலந்து கொண்ட கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.



தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாநிலக் கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.



கல்வியாளர்கள், பாடநூல் வல்லுநர்கள், பணி ஓய்வு பெற்ற ஆசியரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எழுத்துப் பூர்வமாகவும்,நேரிலும் தெரிவித்தனர்.



கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வி தலைமை வகித்தார்.மாவட்டக் கல்வி அலுவலர் வள்ளிநாயகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முனிசுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில் மாநிலக் கொள்கையை வடிவமைப்பது தொடர்பாக மாவட்ட அளவில் கருத்துக்களை கேட்டு அதன் பின்னர் வரும் 5 ஆம் தேதி சென்னையில் ஓய்வு பெற்ற நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. 

மண்டல அளவிலான கூட்டத்தில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர். இதே போல தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி அதன் பின்னர் மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்படவுள்ளது. 

மாநில கல்விக் கொள்கை தொடர்பா கருத்து தெரிவிக்க விரும்புவோர் ஸ்ரீங்ர்ந்ஹய்ஸ்ரீட்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலிலும் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

No comments

Thank you for your comments