காஞ்சிபுரம் நகரீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்பனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அன்னதானம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நகரீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி ஐயப்பன் சன்னதியில் சிறப்பு பால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினார்கள்.
இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் பேரருளை பெற்று சென்றனர்.
விழா ஏற்பாடுகளை பாண்டுரங்க குருசாமி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
.jpg)

No comments
Thank you for your comments