Breaking News

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்சாரம் - பாதுகாப்பற்ற மின் இணைப்பு

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் சிறுநீரகம் கழிப்பதற்காக ஒரு இடம் அமைக்கப்பட்டு அதில் வாட்டர் டேங்க் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த மின்மோட்டருக்கு மின்சாரம் வழங்குவதற்காக பொதுமக்கள் கை கழுவும் இடத்திற்கு அருகாமையில் பொருத்தப்பட்டு உள்ளதால் இதற்கு பாதுகாப்பு இல்லாத முறையில் இருப்பதனாலும் தண்ணீர் மேலே சிதறி உயிர்பலி வாங்கும் அவல நிலை உள்ளது. 

 மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன்
 ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...

ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதனை சரி செய்து உயிர் பலி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும்,  வாட்டர் டேங்க் உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது  இதனையும் உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.



 

No comments

Thank you for your comments