Breaking News

மழைநீர் வடிகால் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மழைநீர் வடிகால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இன்று வடகிழக்க பருவமழையை மாவட்டத்தில் தீவிரமடைந்து உள்ளதால் தண்ணீர் தேங்காமல் இருக்க  வடிநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு, உலகளந்த பெருமாள் கோவில் தெரு, ஆவாகுட்டை தெரு, ஆகிய இடங்களில் மழைநீர் வடிநீர் கால்வாய்களையும் பிள்ளையார்பாளையம், லிங்கப்பன் பாளையம் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றபடுவதை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளையும கேட்டறிந்து கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால், எல்லா மண்டலத்திலும்,  துணை ஆட்சியர் மூலமாக மண்டலக்குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வந்து, கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக நிவாரண தங்குமிடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.

மேலும், தொடர்ந்து மூன்று நாட்கள் மழை அறிவிப்பின் காரணமாக, மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மாவட்ட பேரிடர் தொடர்பான அவசரகால கட்டுப்பாட்டு குழு கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடமிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள்மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 4 துறையை சார்ந்த அலுவலர்கள் 24 மணி நேரமும், கண்காணிக்க மாவட்ட பேரிடர் தொடர்பான அவசரகால கட்டுப்பாட்டு குழு செயல்பட்டு வருகிறது.

இவ் ஆய்வின்போது  உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பித்ஜெயின், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திரு.கண்ணன், கூட்டுறவு இணை பதிவாளர் திருமதி.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபரம் மாவட்டம்.



No comments

Thank you for your comments