Breaking News

இயற்கை எழில் கொஞ்சும் அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர்கள் வாழும் மண்டலமாக அரசு அறிவிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒரு இயற்கை எழில் கொஞ்சும் அரிட்டாபட்டி கிராமம்  பல்லுயிர்கள் வாழும் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தார்.  முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆர்வலர்கள் கொண்டாடினார்கள்.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே  அரிட்டாபட்டி கிராமம் உள்ளது,பச்சை போர்வை போர்த்தி யது போன்று இயற்கை எழிலோடு காட்சி தரும் இப்பகுதியின் மூன்று திசைகளையும் இணைக்கும் வகையில் ஏழு மலைகள் கொண்ட பெரும் குன்றுகள் உள்ளன. 

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை

இதன் காரணமாக இப்பகுதியில் அரிய வகை பறவைகள், மான் உள்ளிட்ட விலங்குகள், பூச்சிகள், என பல்வேறு உயிரி னங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.  இந்த நிலையில் இப்பகுதியை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு சார்பில்  அறிவிக்கப்பட்டு,தற்போது அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொது மக்கள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

பறவைகள், விலங்குகள் மட்டுமின்றி ஏழு மலைகளை உள்ளடக்கிய இந்த அரிட்டாபட்டி கிராமம்,2000 ஆண்டுகளுக்கு முந்தைய  பாரம்பரியம் கொண்ட குடவரை சிவன் கோவில், சமணர் படுகைகள், மலையில் பொறிக்கப்பட்ட புத்தர் உருவம்,பண்டைய காலத்து எழுத்து வடிவங்கள்,பாண்டிய மன்னர் காலத்து கலாச்சார புராதண கற் சிற்பங்கள், என பல்வேறு அதிசயங்களையும் சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சுற்றுலா தளமாகவும், தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட குழுவினர்கள் வருகை தரும் இடமாகவும், சிவனடியார்கள் உள்ளிட்ட பக்தர்கள் விருப்பி வந்து செல்லும் ஒரு புண்ணிய ஸ்தலமாகவும் இக்கிராமம் விளங்குகிறது.

மேலும் இது 77 ஏரிகள், 200 க்கும் மேற்பட்ட நீரூற்றுகள் கொண்டுள்ளதால்  மழை விழும் காலங்களில் இந்த ஏழு  மலைகளில் இருந்து வரும் தண்ணீர்  அடி வாரத்தில் உள்ள ஏரி, கண்மாய்களில் தேங்கி குடிநீர் தேவைகளையும்,விவசாய தேவைகளையும் வருடம் முழுவதும் வற்றாத ஜீவ நதிகளாக இருந்து பூர்த்தி செய்து வருகின்றன.  இதனால்  இந்த கிராமம் எப்போதும் பச்சை போர்வை போர்த்தியது போன்று மிக ரம்மியமாக, பசு மையாக காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் அடிக்கடி கல்வி  சுற்றுலா மற்றும் ஆய்வுக்காக வரும் கல்லூரி மாண வர்கள் இங்கு 275 க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள் மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள், 500 வகையான பூச்சி வகைகள்,மலைப்பாம்புகள்,உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர், மேலும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

இந் நிலையில் தமிழக அரசு இப்பகுதியை பல்லுயிர்கள் வாழும் மண்டலமாக அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.  

ஏழு மலை பாதுகாப்பு குழு தலைவரும் மற்றும் பல்லுயிர் வன பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான சமூக நல ஆர்வலர் அரிட்டாபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த பல ஆண்டுகளாக கிராமத்தின் தன்னார்வ இளைஞர்களோடும், கிராம மக்களோடும் ஒன்றிணைந்து இந்த ஏழு மலைகளையும், மலைகளை வாழ்விடமாக கொண்டுள்ள அரிய வகை பறவைகள் மற்றும் விலங்கினங்களையும் பாதுகாக்க களமிறங்கினார். 

தலைவர் வீரம்மாள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற நிர்வாகம் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன்,கிராம இளைஞர்கள் தரப்பில்  தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் தங்களது கோரிக்கை  நிறைவேறியுள்ளது, என தெரிவித்துள்ளனர். 

தமிழகத்திலேயே முதன் முதல் பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக அரிட்டாபட்டி  அறிவிக்கப்பட்டுள்ளதை கொண்டாடும் விதமாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும்,இனிப்புகள் வழங்கியும் தங்களது பெரும் மகிழ்ச்சியை இப்பகுதியினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments