Breaking News

ஸ்ரீ ராஜ குபேரருக்கு காஞ்சி ராஜ குபேர சித்தரால் அபிஷேகம் செய்து தீப தூப ஆராதனைகள்

காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே அமைந்துள்ள குபேர பட்டினத்தில்   இன்று வியாழக்கிழமை என்பதாலும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா என்பதாலும் ஓம் ஸ்ரீ ராஜ குபேரருக்கு காஞ்சி ராஜ குபேர சித்தரின் பொற்கரங்களால் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்களால் அபிஷேகம் செய்து தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. 


இதற்கு முன்னதாக கோவில் படிக்கட்டில் கற்பூர தீபம் ஏற்றி மலர் தூவி பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. 

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை

ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்த விழாவிநீல்  2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்வில் செல்வம்  செழிக்கவும் தொழில் வளர்ச்சி அடையவும் நீண்ட ஆயுளுடன் சுபிக்ஷமுடன் வாழவும் ஓம் ஸ்ரீ ராஜகுபேரரை வழிபட்டு வணங்கி சென்றனர். 

இதற்கு முன்னதாக திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பின்னணி பாடகர்கள், திரைப்பட நடிகர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் இங்கு வருகை தந்து ஓம் ஸ்ரீ ராஜ குபேரரின் அருளை  பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது  . இவ்விழாவின்  முடிவில்  அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.



No comments

Thank you for your comments