மேலூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் கடும் எதிர்ப்பு
மேலூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் கடும் எதிர்ப்பு, கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலி யுறுத்தி திமுக, அதிமுக நிர்வாகிகள் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடைபெற்றது.
மேலூரில் மதுரை- திருச்சி மெயின் ரோட்டில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கடந்த நான்கு வருடங் களுக்கு முன்னர் ஒரு தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 5220 என்ற எண்ணுடைய அரசு மதுபானக் கடை ஒன்று திறக்கப்பட்டது.
அதனால் அப்பகுதியில் மதுப்பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததை யடுத்து தங்களது பகுதியின் அமைதி பாதிக் கப்பட்டுள்ளது என தெரிவித்து,கடையை அங்கிருந்து அகற்ற அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் களமிறங்கி போராட தொடங்கினர்.
ஆனாலும் அங்கிருந்து அந்த கடையை அப் புறப்படுத்த முடிய வில்லை
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளரை சந்தித்து முறையிட்டதன் பயனாக நேற்று 16 11 2022 முதல் அந்த இடத்தில் இருந்த கடையை மூட உத்தரவு பிறப்பிக்கபட்டது.
மேலும் அந்த 5220 நம்பர் கடையை மேலூர் அழகர்கோவில் சாலையில் புதுச்சுக்காம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் திறப்பதற்கு அதி காரிகள் முயற்சி மேற் கொண்டனர்,புதிதாக பிடிக்கப் பட்ட கடையில் மதுபாட்டில்கள் வாகனங்களில் கொண்டு போய் இறக்கப்பட்டது
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை தங்களது பகுதியில் திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தாசில்தார்,டிஎஸ்பி,என அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அந்த இடத்தில் கடை திறக்கப்படாது என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சுக்காம்பட்டியில் பொது மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட அந்த கடை யை மீண்டும் அதே மெயின் ரோட்டில் முன்பு இருந்த அதே இடத்தில் திறக்க அதிகாரிகள் மீண்டும் முயன்றனர்.
இந்த தகவலையறிந்து அதிர்ச்சியடைந்த அப் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள்,குறிப்பாக பெண்கள் கைக்குழந்தை சகிதமாக கடையின் முன்பாக அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர், மாற்று இடம் கிடைக்கும் வரை 20 நாட்கள் மட்டும் இங்கு வைத்துக்கொள்ள அதிகாரிகள் அனுமதி கேட்டு நீண்ட நேரம் போராடினர்,ஆனாலும் குடியிருப்பு வாசிகள் அதை ஏற்றுக் கொள்ள வில்லை,
அதிமுக மாவட்ட பொருளாளர் அம்பலம்,மற்றும் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் எஸ்.வி.பி.செல்வம் ஆகியோர் அங்கு வந்து குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர், ஏற்கனவே மூடப்பட்ட அந்த இடத்தில் கடையை திறக்க கூடாது என அவர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்,
அந்த நேரம் திமுக மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி,அங்கு விரைந்து வந்து டாஸ்மாக் அதிகாரி களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் ,மேலும் குடியிருப்பு வாசிகள் தங்களது அமை திக்கு பங்கம் ஏற்படுவதாக எதிப்பு தெரிவிக் கும் நிலையில் பொதுமக்களுக்கு இடை யூறாக இந்த கடையை மீண்டும் இங்கு திறக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்,அதற்கு டாஸ்மாக் அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர்,
மேலும் கடையின் முன்பாக அமர்ந்திருந்த பெண்களிடமும் இங்கு கடை உறுதியாக திறக்கப்பட மாட்டாது,எனவும் நம்பிகாகையோடு கலைந்து வீடுகளுக்கு செல்லுமாறும் மாவட்ட கவுன் சிலர் நேரு பாண்டி கேட்டுக் கொண்டார், அதனைத்தொடர்ந்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு திமுக, அதிமுக என இரண்டு கட்சியினருக்கும் தங்களது நன்றியை கைகூப்பியவாறு தெரி வித்து அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தால் போக்கு வரத்துக்கு அறவே இடையூறு இல்லையென்றாலூம் அப்பகுதியே நீண்ட நேரமாக மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.மேலும் திமுக,அதிமுக,அந்த பகுதி திமுக வார்டு கவுன்சிலர் என அரசிய லில் எதிரும் புதிருமாக உள்ளவர்கள் அனை வரும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி டாஸ்மாக் கடையை அகற்ற களமிறங்கியது, அனைவரையும் ஆச்சரியத் தோடும் பிரமிப்போடும் பார்க்க வைத்தது.



No comments
Thank you for your comments