Breaking News

69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு ரத்த தான முகாம்

69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு அரசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரத்த தானம் அளித்துள்ளது . 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. 

👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இவ்விழாவின் ஒரு அங்கமாக காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் திருமதி பா.ஜெயஸ்ரீ அவர்களின் தலைமையில் 17.11.2022 அன்று சின்ன காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி மற்றும் பெரிய காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி இணைந்து காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் ரத்த தான முகாம்" நடைபெற்றது.

 

இம்முகாமில் ரத்த தானம் அளித்த கூட்டுறவாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. 

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் திரு மு. முருகன், துணைப்பதிவாளர்/பணியாளர் அலுவலர் திரு.மு.தயாளன், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.கி.மணி, சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் டாக்டர்.தே.சித்ரா, பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் திருமதி.மு.சாய்குமாரி மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments