Breaking News

நிரம்பிய நீர் நிலைகளை நேரில் ஆய்வு செய்தார் ஆட்சியர் ஆர்த்தி

வடகிழக்கு பருவமழையால் நிரம்பிய நீர் நிலைகளில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ,  கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் இதனை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  தெரிவித்துள்ளார்.



வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 தினமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளன. 

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 39 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. 

40 ஏரிகள் 75% மேல் நிரம்பி உள்ளன, 149 ஏரிகள் 50% மேல் நிரம்பி உள்ளன, 338 ஏரிகள் 25% மேல் நிரம்பி உள்ளன, 343 ஏரிகள் 25% கீழ்  நீர் நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி, கலங்கள் வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. 

தாமல் ஏரியில் நீர் நிரம்பியதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் சென்று ஏரியை ஆய்வு மேற்கொண்டார்.

 ஏரியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறுகையில், 

கடந்த இரண்டு மூன்று நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல ஒவ்வொரு முறையும் ஏரிகள் நிரம்பும் பொழுது காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , நீர்நிலைகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்  மீன்பிடித்தல் , குளித்தல் உள்ள விபரீத விளையாட்டுக்களில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள் தூர்வாரப்பட்டு அதன் வழித்தடங்களும் தூர்வாடப்பட்டு உள்ளதால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாக தெரிவித்தார்

ஆட்கள் தேவை!

காலச்சக்கரம் நாளிதழுக்கு!
செய்தி மற்றும் விளம்பரம் சேகரிக்க துடிப்பு மிக்க செய்தியாளர்கள், விளம்பர பிரதிநிதிகள் மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக தமிழகம் முழுவதும் உடனே தேவை. சிறிய அளவில் முதலீடு செய்து நாளிதழை அவர்தம் நேரடி பொறுப்பில் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்ய விரும்பும் முகவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடன் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.           Advt.,

தொடர்புக்கு - 9360005566


No comments

Thank you for your comments