மேலூர் அருகே தென்னந்தோப்பில் போலி மதுபான தயாரிப்பு கூடம்... காவல்துறையினர் கடும் அதிர்ச்சி
மேலூர் அருகே தென்னந்தோப்பில் போலி மதுபான தயாரிப்பு கூடம், காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். 15 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம்,லேபிள்கள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியில் போலி மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக மோகன் என்பவரை மது விலக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் மத்திய நுண்ணறிவுப்பிரிவு போலீசார் மற்றும் மேலூர் பகுதி மதுவிலக்கு,சட்டம் ஒழுங்கு,தனிப்பிரிவு போலீசார் இணைந்து, மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி காவல் சரகம், உதினிப்பட்டி என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு அடர்ந்த மரங்கள் அடங் கிய தென்னந்தோப்பில் சோதனை நடத்தினர்
அப்போது அங்குள்ள ஒரு ஆஸ்பெடாஸ் போடப்பட்ட கட்டிட அறையில் வைத்து போலி மது பானங்கள் தயாரித்து வந்தது கண்டுபிடி க்கப்பட்டது.
அந்த அறையில் இருந்து மதுபானம் தயாரிக்கும் மூலப்பொருளான எரிசாராயம் அடங்கிய 19 கேன்கள்,மற்றும் கட்டுக்கட்டாக போலி லேபிள்கள்,காலிப் பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்,மேலும் இது தொடர் பாக அந்த தென்னந்தோப்பின் உரிமையாளர் பூபதி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருச்சியை சேர்ந்த ஜான்சன் என்பவர் தன்னை அனுகி பிராய்லர் கோழி கடை வைத்து நடத்தி வருவதாகவும்,ஆகவே ,கோழிகளை அடைத்து வைக்க ஒரு அறை வாடகைக்கு வேண்டும் என கேட்டதையடுத்து அதை நம்பி தான் வாடகைக்கு விட்டதாகவும், இது போன்று சட்டவிரோதமாக போலி மது பானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தியது தமக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்,
தலைமறைவாக உள்ள ஜான்சனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்,ஜான்சன் பிடிபட்டால் அவர் இங்கு வைத்து மது தயாரித்துள்ளாரா, தயாரித்திருநாதால் எங்கெல்லாம் விநியோகம் செய்துள்ளார், மற்றும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து எரிசாராயம் நிரப்பப்பட்ட 19 கேன்கள் உள்ளிட்ட சுமார் 15 லட்சம் மதிப் புள்ள போலி மது பான ரசாயணக் கலவை மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி யுள்ளனர், சட்ட விரோதமாக போலி மது பான தயாரிப்பு கூடம் இருந்தது மேலூர் பகுதி போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments
Thank you for your comments