தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றனர் காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர்கள்
சென்னையில் நடைபெற்ற 38-வது தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப்பில் காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர்கள் தங்கம்,வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
சென்னை-செயின்ட் தாமஸ் மவுண்டில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷன் சார்பில் 38-வது தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
8 முதல் 13 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்ற இந்த சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் காஞ்சிபுரம் சாம்பியன்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி பயிற்சியாளர் R.K.பிரகாஷ் பயிற்சியில் பயின்ற சாம்பியன்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஏழு தங்கப்பதக்கங்களும் ஒரு வெள்ளி பதக்கமும் மூன்று வெண்கல பதக்கங்களும் வென்றனர்.
இந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கங்களை வென்ற ஏழு வீரர்களும் அடுத்து டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments
Thank you for your comments