Breaking News

காஞ்சிபுரத்தில் செயல்படாமல் இருந்து வந்த நியாயவிலைக்கடை திடீரென மீண்டும் திறப்பு

காஞ்சிபுரம், நவ.29

காஞ்சிபுரம் தாயார்குளத்தில் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு செயல்படாமல் இருந்து வந்த நியாயவிலைக்கடை மீண்டும் செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு தாயார்குளம் பகுதியில் ரூ.13.50லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 3.1.2022 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த நியாயவிலைக்கடை செயல்படாமல் இருந்து வந்தது.


இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் விரைவில் நியாயவிலைக்கடையை திறந்து வைக்க வேண்டும் என்று சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

இத்தகவலறிந்து கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் கல்யாணக்குமார்,வட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.பின்னர் விற்பனையையும் தொடக்கி வைத்தனர்.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 


இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்,வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் நியாயவிலைக்கடை திறந்து வைக்கப்பட்டிருக்கும். வடிவேல்நகர், தாயார்குளம், எம்.ஜி.ஆர்.நகர், இளமை நகர், டோபிகாலணி, காவலர் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நியாயவிலைக்கடையில் பொருட்களைப் பெற்று பயன்பெறுமாறும் அவர்கள் தெரிவித்தனர்.


No comments

Thank you for your comments