நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நிலம் வாங்க மானியம்
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நிலம் வாங்க மானியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 200 நிலமற்ற விவசாய தொழிலாளர் 10 கோடி மதிப்பீட்டில் 5.00 இலட்சம் மானியத்துடன் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம், நில மற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மொத்த இலக்கு 6ல், 5 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 பழங்குடியினருக்கும் தலா 5.00 இலட்சம் வீதம் ரூ.30,00,000 மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாணை எண்.79ல், நாள்.10.09.2022 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சிஉதி) துறையில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மொத்த இலக்கு 6ல், 5 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 01 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு நிலம் வாங்க தலா ஐந்து இலட்சம் மானியம் வழங்கப்படும்.
குடும்ப ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும்.
வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்க கூடாது. வாங்க உத்தேசிதுள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்ய வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிறர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments