Breaking News

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழா தொடக்கம்

காஞ்சிபுரம், நவ.14

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழாவின் தொடக்கத்தையொட்டி திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள கூட்டுறவுச்சங்க இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுக் கண்காட்சி நடைபெற்றது.


அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதன் தொடக்கத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிந்த பந்தலில் கூட்டுறவுக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. 


கண்காட்சியை கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ திறந்து வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்விற்கு திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுச்சங்க மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி,காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்ததுடன் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

கண்காட்சி தொடக்க விழாவில் கூட்டுறவுச்சங்க துணைப்பதிவாளர்கள் தயாளன், மணி ஆகியோர் உட்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



கண்காட்சியில் கதர்வாரியம்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்,ஆவின் நிறுவனம்,கூட்டுறவு பட்டு விற்பனைச் சங்கம் ஆகியன உட்பட பல்வேறு நிறுவனங்களும் தங்களது பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.

 

No comments

Thank you for your comments