Breaking News

மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 1.5 கோடி இழந்த காவல்துறையினர்

திருவள்ளூர், நவ.14-

திருவள்ளூர் மாவட்டம் எஸ் எம் காவல் நிலையத்தில்  10.11.2022 அன்று ஆயுதப் படையில் காவலராக பணியாற்றும் நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ் எம் நகர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இவர்கள் மலேசியாவில் உள்ள ஆயில் நிறுவனத்தில் ரூபாய் 1,00,000 முதலீடு செய்தால் மாதந்தோறும் 15,000 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று 20.07.2022 அன்று ஆவடி சோதனை சோதனை சாவடி அருகே 5,00,000 செலுத்தி ரசீது பெற்றார். இவர் லாபமாக 75,000 பெற்றதால் சக காவல்துறை நண்பர்களிடம் கூறி பன்னிரண்டு லட்சம் முதலீடு செய்துள்ளனர். 

👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதல் தவணையாக 25,00,000 முதலீடு செய்துள்ளனர் பிறகு விசாரணை மேற்கொண்டதில் 1,21,00,000 ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று  தெரியவந்தது. 

மேலும் விசாரனையில் ரூ.1,44,00,000 ஏமாற்றப்பட்டனர் என்று தெரியவர உடனே ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களின் உத்தரின் பெயரில் குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

No comments

Thank you for your comments