ஸ்தம்பித்துப்போன மாங்காடு... மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு...
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சக்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 1000 - க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலையின் ஓரங்களில், இருந்த கால்வாய்கள் உடைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இருப்பினும் வழியாத மழை நீரில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் வீட்டில் உள்ளவர்களை மீட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே, அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர்ந்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் இருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தண்ணீர் வடியாத காரணத்தினால், இன்று காஞ்சிபுரம் மாங்காடு பகுதியில், இருந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இப்பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதி வீட்டிற்குள் நுழைந்த தண்ணீர் கூட மூன்று நாட்களாக, வெளியேறாமல் இருப்பதால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

No comments
Thank you for your comments