Breaking News

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிப்பாடு

சேலம் சாமிநாதபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  ஒவ்வொரு அமாவாசை அன்று காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி குழந்தை இல்லாதவர்கள் ஒரு கிலோ அரிசி மடியில் கட்டி அம்மனுக்கு காணிக்கை செலுத்தி தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதே இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.


 

இந்த கோவில் கடந்த 10 ஆண்டுகளாக குருக்கள் சதீஷ் தலைமையில் சிறப்பாக ஒவ்வொரு அமாவாசை அன்று வழிபாடு நடைபெற்று வருகிறது 

ஒவ்வொரு அமாவாசை அன்று இந்த பூஜையில் வெளிமாநிலத்தோர் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்டோர் இந்த பூஜையில் கலந்து கொண்டு அம்மனுக்கு அரிசி வழங்கி தொட்டில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர் 

🔥 இராணி மேரி கல்லூரியை இடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அம்மையார் ஜெயலலிதா   🔥 நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை  🔥 பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மேலும் இங்கு வரும் பக்தர்கள் அமாவாசைக்கு முந்தைய தினமே இரவு அங்கு தங்கி இருந்து  பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வருகின்றனர் அங்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகி சதீஷ் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி வருகிறார்.

No comments

Thank you for your comments