உக்கடம் லாரி பேட்டை பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து காவலர் நியமிக்க கோரிக்கை
கோவை குனியமுத்தூர், உக்கடம் பேருந்து நிலையத்தை ஒட்டி, ஆத்துப்பாலம் செல்லும் வழியில் லாரி பேட்டை அமைந்துள்ளது. இங்கு மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தினமும் இந்த மீன் மார்க்கெட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. சராசரியாக 100-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் உள்ளே சென்று வெளியே வருகிறது. இதனால் அந்த பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களும் அதிவேகமாக இந்த சாலையில் பயணிக்கின்றனர். இந்நிலையில் லாரி பேட்டைக்குள் நுழையும் வாகனங்களால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. வாகனங்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு செல்கின்றன. இதனால் வாகன ஒட்டிகள் இடையே சிறு சிறு பிரச்சணைகள், மோதல் ஏற்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, இந்த இடத்தில் 24 மணி நேரமும் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீர் செய்தால் மட்டுமே பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், சாலை அகலமாக இருப்பதால் அதி வேகமாக வருகின்றனர்.
இந்நிலையில் கட்டுப்பாடு இன்றி, இடது பக்கம் திரும்பி லாரிப்பேட்டைக்குள் செல்ல முயற்சி செய்பவர்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் அமைத்து போக்குவரத்தை சீர் செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறினர்.

No comments
Thank you for your comments