Breaking News

தாட்கோ கடன் வழங்காதை கண்டித்து அம்பேத்கார் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் சார்பில் முற்றுகை ஆர்ப்பாட்டம்

 சேலத்தில்

தாட்கோ கடன் வழங்காதை கண்டித்து அம்பேத்கார் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தலைமையில் சேலம் ராஜகணபதி கோவில் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை அலுவலகம் முன்பு  முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து  OB வங்கி பிராந்திய மண்டல மேலாளர் அலுவலகத்தில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு  உடனடியாக அழைப்பு விடுத்ததால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது

இதற்கு முன்னதாக முற்றுகை போராட்டம் அம்பேத்கார் பார்ட்டி ஆப் இந்தியா தமிழ்நாடுமாநில தலைவர் சி அம்பேத்கார் தலைமயில் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தாட்கோ மூலம் கடன் வழங்கப்படாத பட்டியலில் மக்களுடன் ஐம்பதுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து மாநிலத் தலைவர் சி. அம்பேத்கார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த ஜம்பு என்ற பட்டியல் இன கூலி தொழிலாளி சேலம் தலைமை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தாட்கோ மூலம் காலனி கடை வைப்பதற்காக 5 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். 

இதன் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் காலம் தாழ்த்தி வந்ததாகவும் இதனை அடுத்து இரண்டு லட்சம் மட்டும் தரப்படும் என்றும் கூறியதாகவும் ஆனால் அந்த கடனையும் தராமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் கூறி கடன் கொடுக்க மறுக்கப்படுவதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தங்களிடம் கோரிக்கையை வைத்ததால் நாங்கள் ஒன்று கூடி இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தினோம் என்று கூறினார்

No comments

Thank you for your comments