அழகப்பா பல்கலைகழகத்தின் வாயிலாக நடைபெறும் 4 மாத காலம் சிறப்பு உடற்பயிற்சி
அழகப்பா பல்கலைகழகத்தின் வாயிலாக நடைபெறும் 4 மாத காலம் சிறப்பு உடற்பயிற்சியில் கலந்துக்கொள்வதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
ராணுவத்தில் 6 மாதக்காலம் சிறப்பு உடற்பயிற்சி கல்வி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு (Basic Course in Physical Education) உடற்பயிற்சி பணிக்கு உதவிடும் வகையில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தின் வாயிலாக 4 மாத காலம் சிறப்பு உடற்பயிற்சியில் கலந்துக்கொள்வதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை வழங்கிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments