Breaking News

திருமுக்கூடல் பகுதியில் தடுப்பணை நிரம்பி வழிந்து செல்லும் பாலாற்று நீர் விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று தடுப்பணைகள் நிரம்பியது தற்போது திருமுக்கூடல் பகுதியில் தடுப்பணை நிரம்பி வழிந்து செல்லும் பாலாற்று நீர்... விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி ...



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பகுதியில் முக்கடல் சங்கமிக்கும் திருமுக்கூடல் பகுதியில் அமைந்துள்ள பழையசீவரம் - உள்ளாவூர் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி தடுப்பணை தாண்டி நீர் வழிந்து செல்கிறது. 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் முக்கிய ஆறான வேகவதி ஆறு, பாலாறு, செய்யாறு என மூன்று ஆறுகளும் திருமுக்கூடல் பகுதியில் சங்கமித்து பாலாற்று வழியாக செல்லும் 

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக செய்யாற்றில் மட்டும் நீர் செல்கிறது. தடுப்பணையை தாண்டி நீர் வழிந்து செல்வதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு செல்லும் வெங்கச்சேரி மற்றும் அனுமன்தண்டலம் தடுப்பணையில் தாண்டி நீர் வழிந்து செல்கிறது குறிப்பிடத்தக்கது.


No comments

Thank you for your comments