Breaking News

ஆபத்து ஏற்படுத்தும் பெட்ரோல் பங்கை மூட பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

 பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கை மூட வேண்டுகோள் விடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மனு.



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டம்,பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 50க்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனித மரியாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 

இந்நிலையில் இப்ப பள்ளியில் தங்களின் குழந்தைகள் படித்து வரும் நிலையில் பள்ளி முன்பு பள்ளி மாணவர்களின் உடல் நிலைக்கும் உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கை தங்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்கை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.

No comments

Thank you for your comments