Breaking News

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றி கதை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்த மாணவ, மாணவிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை 07.05.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்ணா பிறந்த நாளான 15.09.2022 அன்று மதுரையில் முதலமைச்சரின் காலை உணவு  திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர் நிகழ்வாக  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பட்டாள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் மாணவ, மாணவியர்களுக்கு சிற்றுண்டியினை மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பரிமாறி காலை உணவு  திட்டத்தை தொடங்கி வைத்தார்.



நமது மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி கீழ் இயங்கும் 19 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1772 மாணவ, மாணவியர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகின்றது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திங்கள் கிழமை  ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமாவும் அல்லது செவ்வாய் கிழமை ரவா கிச்சடி அல்லது சேமியா கிச்சடி அல்லது சோளம் கிச்சடியும், புதன்கிழமை  வெண் பொங்கல் அல்லது வரகுபொங்கல் அல்லது ரவாபொங்கலும், வியாழன் கிழமை அரிசி உப்புமா அல்லது ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமாவும், வெள்ளி கிழமை சர்க்கரைபொங்கல் அல்லது ரவா கேசரி அல்லது சேமியா கேசரியும் என ஒவ்வொரு பள்ளி நாட்களிலும் சுழற்சி முறையில் வெவ்வேறு வகையான சிற்றுண்டி மாணவ, மாணவியர்களுக்கு  வழங்கப்படுகின்றது.

இந்த சிற்றுண்டி புதுப்பாளையத் தெருவில் உள்ள தொடக்கப்பள்ளியின் வளாகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு இரு வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் மாணவ, மாணவியர்களுக்கு வயிற்று பசி நீங்கி மனதெளிவோடு பாடங்களை கற்பதை உறுதி செய்யும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  

இந்த காலை உணவு திட்டம் திறம்பட செயல்படுவதற்கு மாநில மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

”அறிவு பசியை போக்க முதலில் வயிற்று பசியை போக்குவோம்” என்ற வாசகத்திற்கு இணைங்க,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் பள்ளி வருகை தரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவிகள் தெரிவித்ததாவது:

செவிலிமேடு, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவி  கனிஷ்கா   கூறுகையில்

 இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும், என்னுடைய பெற்றோர்கள் காலையில் அவசர அவசரமாக சமைத்து,  பள்ளிக்கு அனுப்பும் பாரம் குறைந்துள்ளது. எனது  குடும்பத்தின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வரலட்சுமி

செவிலிமேடு, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவி  வரலட்சுமி,  என்பவர் கூறுகையில் 





இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும், என்னுடைய பெற்றோர்கள் காலையில்  வேலைக்கு சென்று விடுகின்றனர். பள்ளியில் காலை உணவு திட்டத்தின் மூலமாக உண்டு மகிழ்ந்து, பசியாறி, பள்ளி படிப்பையும் தொடர்ந்து பயின்று வருகிறேன். இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தொகுப்பு:

திரு.ப.கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்

No comments

Thank you for your comments