Breaking News

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு... ரூ.65.28லட்சம் பக்தர்கள் காணிக்கை

காஞ்சிபுரம், நவ.24-

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.65.28லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


படவிளக்கம் : காமாட்சி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பணியாளர்கள்

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.கோயில் செயல் அலுவலர் ந.தியகாரஜன் தலைமையிலும் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் முன்னிலையிலும் கோயில் பணியாளர்களால் உண்டியலில் இருந்த தொகை எண்ணப்பட்ட போது அதில் ரொக்கமாக ரூ.65.28,071 இருந்தது.தங்கம் 332.640 கிராமும், வெள்ளி 664.290 கிராமும் இருந்தன. உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்ட போது அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகாவும் உடன் இருந்தார்.


No comments

Thank you for your comments