வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்க்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் மாவட்ட திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி முன்னிலை வகிக்க,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கல்யாணி ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்துகொண்டு 150 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை,பூ,பழம்,தேங்காய் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் திமுகவை சேர்ந்த வாலாஜாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன்,துணை தலைவர் பி.சேகர்,வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எம்.பாபு,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய அவைத்தலைவர் பழனி,
துணை செயலாளர்கள் வெங்கட்ராமன்,கவிதா டில்லிபாபு, ஒன்றிய பொருலாளர் சங்கர்,மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், பார்த்திபன், திருஞானசம்பந்தம் உள்ளிட்ட திமுகவினர் கர்ப்பிணி பெண்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.






No comments
Thank you for your comments