49 வது வார்டு பாரதிதாசன் நகர் பகுதியில் பகுதி சபைக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பகுதி சபை கூட்டம் நடைபெற்றது 49 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் ஏற்பாட்டில் இந்த பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்களிடமிருந்து குறைகள் கேட்கப்பட்டது அதில் தார் சாலைகள் மற்றும் சிசிடிவி கேமரா கழிவுநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர்.
இதனை சரி செய்து தருவதாகவும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான கா.சுந்தர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி தமிழ்ச்செல்வன், மூன்றாவது பகுதி கழக செயலாளர் தசரதன், காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ் கே பி ஸ்ரீனிவாசன் பகுதி கழக துணை செயலாளர் மலர்மன்னன், மாநகர பிரதிநிதி எம் எஸ் பி பாண்டியன்,மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் சங்கர் பகுதி கழக பொருளாளர் தேனம்பாக்கம் செல்வம், பகுதி கழக துணை செயலாளர் சுமித்ரா, ஐம்பதாவது வார்டு வட்ட பிரதிநிதி எம் விஜயன் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமான இருந்தனர்.
.jpg)


.jpg)
No comments
Thank you for your comments