காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டில் பகுதி சபா கூட்டம்...
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டுக்கு உட்பட்ட மிலிட்டரி அருகே தனியார் திருமண மண்டபத்தில் மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் ஏற்பாடுகளை 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செய்திருந்தார்
இக்கூட்டத்தில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். இதனை சரி செய்து தருவதாக மண்டல குழு தலைவர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ் கே பி சீனிவாசன் காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் குமார் வட்டக் கழக செயலாளர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.





No comments
Thank you for your comments