நிரம்பி வழியும் தாமல் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரி நிரம்பி கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது... விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகிறது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் நிரம்பிய நிலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் அடுத்துள்ள தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி தற்போது கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது. சிறுவர்கள் அதில் உற்சாக குளியல் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தாமல் ஏரி முழு கொள்ளளவு 18 அடி முழுவதுமாக நிரம்பி களங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது இதனால் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.



No comments
Thank you for your comments