ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து 2 -வது நாளாக போராட்டம்
ஈரோடு :
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தூய்மை, காவல், நோயாளிகளை அழைத்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனமோ நாள் ஒன்றுக்கு ரூ.280 வீதம் மாதத்துக்கு ரூ.8 ஆயிரத்து 400 மட்டுமே வழங்கி வருகிறது.
இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம்
எனவே அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், அறிவித்தபடி ஊதியத்தை முழுமையாக வழங்க கோரி ஒப்பந்த ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவில் விடிய விடிய பனியை பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இன்று 2-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணியை புறக்கணித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை அரசு மருத்துவமனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments