குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்... 2 பேர் பலி... கொந்தளிக்கும் பொதுமக்கள்..
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓ.பி.குளம் பள்ளதெரு பகுதியில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு இருவர் அடுத்தடுத்து பலி... மேலும் 2 குழந்தைகள் உட்பட சிலர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும்,ஓரிக்கை பாலாறு பகுதிகளிலிருந்தும் குடிநீர் விநியோகமானது செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 16-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஓ.பி.பள்ளத்தெரு பகுதிக்கு திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும் வரும் குடிநீரானது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 1வார காலமாக குடிநீருடன் கழிவுநீரானது கலந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த புருஷோத்தம்மன் லஷ்மி தம்பதியரின் மூன்றாவது மகன் சதிஷ் குமார்.21வயதுடைய இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முனிதினம் இரவு உணவு உட்கொண்டுவிட்டு படுத்து உறங்கிய நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி தொடர்ந்து ஏற்பட்டு வந்திருக்கிறது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சதிஷ்குமார் அங்கு அனுமதிக்ப்பட்டு சகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 11மணியளவில் மருத்துவர்கள் மேல் சகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்திருந்ததனர்.
இதன் காரணமாக செங்கலபட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்திருந்திருக்கின்றார்.
இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் கழிவுநீர் கலந்துவந்த குடிநீராலேயே சதிஷ் உயிரிழந்ததாகவும் மேலும் இதே போல் நேற்றுமுன்தினம் அதே பகுதியிலிருந்த ரைஸ் மில் ஒன்றில் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த இருளர் இன பெண் இறையரசி(20)என்பவரும் உயிரிழந்தார் என்றனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த 5பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதில் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக சொல்லப்படும் நிலையில் பிறந்து 10மாதங்கள் ஆன எமித்ரா 4 வயதுடைய ஜிஸ்ணு வரதன் என இரண்டு பேர் சகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு பகுதியை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.


No comments
Thank you for your comments