அரசு பீங்கான் தொழில் நுட்ப கலைக் கல்லூரி விடுதிக்கு சமையல் பாத்திரம் மற்றும் ஒரு மாதத்திற்கான மளிகை பொருள்கள் தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கல்
விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில் நுட்ப கலைக் கல்லூரி விடுதிக்கு சமையல் பாத்திரம் மற்றும் ஒரு மாதத்திற்கான மளிகை பொருள்கள் தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தமிழகத்தில் ஒரே கல்லூரி தான் பீங்கான் தொழில் நுட்ப கல்லூரி உள்ளது இந்த கல்லூரியில் தொடர்ச்சியாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்
கல்லூரியில் வெளியூரிலிருந்து வந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு செராமிக்கு கல்லூரி முதல்வர் திருமுருகன் முன்னிலையில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ராதா கிருஷ்ணன் தலைமையில் தனியார் செராமிக் உரிமையாளர்கள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பார்த்தாசாரதி, வெங்கடேஷ் மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நன்கொடையாக வழங்கினார்கள்
முன்னாள் மாணவர்கள் சண்முகம், சுந்தரம், குணசேகர், ஹரி பிரசாத் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் அரசி, மாநில காங்கிரஸ் மகளிர் அணி துணை தலைவி சத்யா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் திருமுருகன் உணவு பரிமாற்றம் செய்தனர்
அரசு பீங்கான் தொழிற்பேட்டை முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி இறுதியில் கண்ணன் நன்றி கூறினார்..

No comments
Thank you for your comments