Breaking News

சாப்பிட்ட இளைஞர்களிடம் பில்லை நீட்டிய சப்ளையருக்கு அடிஉதை.. பதபதைக்கும் சிசிடிவி புட்டேஜ்

  • காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ள தனியார் அசைவ ஓட்டலில் உணவு சாப்பிட்ட இளைஞர்களிடம் பில்லை நீட்டிய சப்ளையருக்கு அடிஉதை. பதபதைக்கும் சிசிடிவி புட்டேஜ் சமூகவலைத்தளத்தில் பரவல்...
  • ஒருவர் கைது..... தலைமறைவாக உள்ள மற்ற வாலிபர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தேடி வருகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் அசைவ ஹோட்டலில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு  மேவலூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவளூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என 6 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டதற்கான பில்லை சப்ளையர்  கொடுத்தபொழுது எங்களுக்கே பில் கொடுக்கின்றாயா  என்று கூறி சப்ளையரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.தடுக்கச் சென்ற மேலாளரையும் தாக்கினர்.  மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டனர்.



இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஹோட்டல் மேலாளர் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று கீவலூர் பகுதியைச் சேர்ந்த ராம் வ.22 என்பவரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சார்ஜன், விஜய் உட்பட அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர். உணவகத்தில் வேலை செய்த சப்ளையர் மற்றும் மேனேஜரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

No comments

Thank you for your comments