Breaking News

+2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு... Tata Electronics தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் Tata Electronics தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 


மகளிர் அதிக அளவில் வேலைவாய்ப்பினை பெரும் பொருட்டு ஒசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (Tata Electronics) நிரந்தர பணியில் பணிபுரிய +2 வரையில் மட்டும் படித்த பெண்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒராண்டு பயிற்சி முடித்தவுடன் நிரந்தர பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  ஓராண்டு பணிபுரிந்தபின் அவர்களுக்கு Tata Electronics நிறுவனத்தில் B.Sc டிகிரி சான்றிதழ் வழங்கப்படும்.

வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே அவர்களுக்கு ரூ.15000/-  ஆரம்ப ஊதியமாக வழங்கபடுவதுடன் உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை சலுகை அடிப்படையில் வழங்கப்படும்.

விருப்பம் உள்ள நபர்கள் 18.11.2022  அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் ஆதார் அட்டை நகல்,  2 பாஸ்போர்ட் அளவு, புகைப்படம், SSLC, HSC மதிப்பெண் சான்றிதழ்கள், சுயவிவர குறிப்பு ஆகிய அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், விவரங்களுக்கு 044-27237124  என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.  இந்த நேர்முகத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments