கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
கோவை, நவ.20-
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...
அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த கோவை கணபதியை சேர்ந்த சபீர்@காதர் பாட்ஷா (27), ரவிக்குமார் (26) போத்தனூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24), மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அகிலேஷ் (22) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து 6 கிலோ கஞ்சா,
அசாம் மாநிலத்தை சேர்ந்த முர்சித்அலி(25) என்பவரை கைது செய்து 1.50 கிலோகிராம் கஞ்சா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் (22) என்பவரை கைது செய்து 1.100 கிலோகிராம் கஞ்சா ஆகிய 6 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 8.150 கிலோகிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.

.jpg)
No comments
Thank you for your comments