Breaking News

TAMCO மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ.1.5 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர்கடன் திட்டம், சுய உதவி குழுக்களான சிறுதொழில் கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம், கறவை மாடு, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.



முகாம் நடைபெறும்  நாள் - இடம்

1).   12.10.2022 அன்று  ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பவானி கிளை, 151 மெயின்ரோடு, பவானி - 638301

2).  13.10.2022 அன்று  ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பஜார் கிளை, 20/9 பெரியார் வீதி, ஈரோடு - 638001

3).   14.10.2022 அன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அந்தியூர் கிளை, கண்ண் 145,பர்கூர்ரோடு,பொன்னாச்சி கவுண்டர் கம்பவுன்ட்,  அந்தியூர் - 638501

4). 15.10.2022 அன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோபி கிளை, 1,வெஸ்ட் பார்க் வீதி,கோபி - 638452

5). 17.10.2022 அன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சத்தியமங்கலம் கிளை, பேங்க் ரோடு, ரங்கசமுத்திரம், சத்தியமங்கலம் - 638402

6). 18.10.2022  அன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, டி.ஜி.புதூர் கிளை, 141/1, காமராஜ் வீதி, சத்தி அத்தாணி பெயின் ரோடு, டி.ஜி புதூர், சத்தியமங்கலம் - 638503

7). 19.10.2022 அன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, டி.என்.பாளையம் கிளை, 278 சத்தி அத்தாணி மெயின் ரோடு, நியர் அண்ணா சாலை, டி.என்.பாளையம் - 638506 

8).  20.10.2022 அன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சித்தோடு கிளை, பவானி மெயின் ரோடு, சாணர் பாளையம், சித்தோடு - 638102.



திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 

திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.


எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை நகல், வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து சிறுபான்மையினர்களும் கடன் உதவி பயனடையுமாறு  ஹெச்.கிருஷ்ணனுண்ணி  தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments