அரசு தொழிற் பயிற்சி நிலைய நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) கால அவகாசம் நீட்டித்து அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 30.10.2022 வரை நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நடைபெற உள்ளது. அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம் , சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும்.
Mechanic Motor Vehicle (SCVT) கம்மியர் மோட்டார் வாகனம், Mechanic Refrigeration and Air-Conditioning Technician (SCVT) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், Electronics Mechanic (SCVT) கம்மியர் மின்னணு‘வியல், Technician Mechatronics (SCVT) இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டுகால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், Welder (SCVT) பற்றவைப்பவர் பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 750/- (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்), விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷீ, இலவச பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9499937448 / 63790 90205 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
No comments
Thank you for your comments